தொழிலாளி மீது விழுந்த வாழைக்குலை: 500,000 டொலர்கள் இழப்பீடு!
தொழிலாளி மீது வாழைக்குலை விழுந்து காயமடைந்ததால் அவருக்கு 500,000 டொலர்கள் இழப்பீடு வழங்கும்படி, முதலாளிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் அவுஸ்திரேலியா, குயின்ஸ்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
குயின்ஸ்லாந்தில் ஒரு பண்ணையில் பணியாற்றிய போது வாழைக்குலை விழுந்ததில் காயமடைந்திருந்த ஜெய்ம் லாங்பாட்டம் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு ஐந்து வருடங்களாக நீடித்து வந்த நிலையில் தற்போது அந்த வழக்கில் காயமடைந்த நபருக்கு முதலாளி இழப்பீடு வழங்கவேண்டும் என நீர்ப்பளித்துள்ளது.
ஆனால், ஒரு மரத்தை வெட்டும் போது தெளிவாக நிற்கத் தவறிய அலட்சியத்திற்காக, இழப்பீட்டிலிருந்து 55,000 டொலர்களை தள்ளுபடி செய்து, தலைமை நீதிபதி கேத்தரின் ஹோம்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
கெய்ர்ன்ஸின் வடக்கே, குக்டவுனுக்கு அருகிலுள்ள L&R Collins என்ற நிறுவனம் நடத்தும் வாழைப் பண்ணையில் ஜெய்ம் லாங்பாட்டம் வேலை செய்துவந்துள்ளார். அங்கு வாழை மரத்திலிருந்து ஒருவர் வாழைக்குலையை வெட்டி போடுவார். அதை கீழேயிருந்து பிடிக்கும் வேலையை ஜெய்ம் லாங்பாட்டம் செய்து வந்தார்.
2016ஆம் ஆண்டு, 70 கிலோகிராம் எடை கொண்ட வாழைக்குலையை பிடித்த போது, ஜெய்ம் லாங்பாட்டம் தவறி விழுந்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை குக்டவுனில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிகிச்சையின் பின்னர் அவரால் விவசாய வேலைக்கு திரும்ப முடியவில்லை.
மேலும் இவ்விபத்து தொடர்பில் பண்ணை அலட்சியமாக இருந்ததாக ஜெய்ம் லாங்பாட்டம் நீதிமன்றத்தில் வாதிட்டார். சாதாரண மரங்களை விட உயரமான வாழைமரங்களில் வாழைக்குழை வெட்டுவது குறித்த முறையான பயிற்சி, வாழைக்குலையை வெட்டுபவருக்கு வழங்கப்படவில்லையென்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கு கடந்த ஐந்து வருடங்களாக சென்றுகொண்டிருந்த நிலையில் தற்போது குறித்த வழக்கு தொடர்பில் லாங்க்போட்டத்திற்கு 558,600.36 டொலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.