வாழைப்பழத்தை இந்த நேரத்தில் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள் குறித்து உணவு முறை நிபுணர் வைத்தியர் ஒருவர் அளித்த கருத்துப்படி, நாளாந்தம் 1 வாழைப்பழம் சாப்பிடுவது பல நோய்களில் இருந்து உங்களை காப்பாற்றும்.
இதேவேளை, வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது நமது தசைகளில் ஏற்படும் கிராம்பை தடுக்கும்.
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் உள்ளது, இது நம் உடலை சுருசுருப்பாக வைத்திருக்க உதவும்.
மேலும் வாழைப்பழத்தை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் சாப்பிட்டு பாருங்கள் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.
வாழைப்பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள் :
வாழைப்பழத்தில் இருக்கும் சத்துக்களைப் பார்த்தால், வைட்டமின்-A, வைட்டமின்-B மற்றும் மெக்னீசியம் தவிர, வைட்டமின்-C பொட்டாசியம் மற்றும் வைட்டமின்-B6, தயாமின், ரிபோஃப்ளேவின் போன்றவை உள்ளன. வாழைப்பழத்தில் 64.3 சதவீதம் தண்ணீர், 1.3 சதவீதம் புரதம், 24.7 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை நாம் உடலுக்கு மிகவும் அவசியம்.
வாழைப்பழம் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:
- வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து உடலின் வலிமையை அதிகரிக்கிறது.
- வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபான் அமினோ அமிலம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
- உடற்பயிற்சிக்கு 30 நிமிடங்களுக்கு முன் வாழைப்பழம் சாப்பிடுங்கள். இது உடற்பயிற்சிகளுக்கு ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவியாக இருக்கும்.
- மாதவிடாய் காலங்களில் எரிச்சல் மற்றும் வலியைக் குறைக்க வாழைப்பழம் உதவியாக இருக்கும்.
- வாழைப்பழத்தில் போதுமான இரும்புச்சத்து உள்ளது, இது இரத்த சோகை அபாயத்தைக் குறைக்கிறது.