பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்த அரசாங்கம்; காரணத்தால் அதிர்ச்சி!
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பலரும் விரும்பிச் சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் “ரோடமைன் பி” கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி
“ரோடமைன் பி” பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என இந்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை தடையை மீறி பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.