SLS முத்திரை இல்லை என்றால் விற்பனைக்குத் தடை
உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும், 'உடனடியாகப் பருகக்கூடிய' அனைத்துப் பழச்சாறு பானங்களும் கட்டாயமாக இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS – Sri Lanka Standards) முத்திரையுடன் இருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை நினைவூட்டியுள்ளது.
அத்துடன், இதே வகையைச் சேர்ந்த இறக்குமதி செய்யப்பட்ட பழச்சாறு பானங்கள், விற்பனைக்கு வருவதற்கு முன்னர், இறக்குமதி பரிசோதனைத் திட்டத்தின் கீழ் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த விதிமுறை, தேசிய உணவு மற்றும் பானத் தரச் சான்றிதழ் தேவைகளுக்கு இணங்க, நுகர்வோருக்கான தயாரிப்பு பாதுகாப்பும் தரத்தையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும்.
அத்துடன் இது குறித்து நுகர்வோர் தங்களின் முறைப்பாடுகளை, 1977 என்ற நுகர்வோர் விவகார ஆணையத்தின் இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்.