எம்.பி அர்ச்சுனா மீதான தடை ; நாடாளுமன்றில் சிறீதரன் சாடல்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் சில தடைகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அர்ச்சுனா இராமநாதன் ஏதெனும் தவறுதலாக பேசியிருந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாகவும் நான் மன்னிப்பு கேட்கின்றேன் என நாடாளுமன்ற உரையின் போது தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 8 நாட்களுக்கு அர்ச்சுனா இராமநாதனின் பேச்சு ஒலி பரப்பு செய்யப்படாமலும் சன்சாட்டிலே பதியப்படாமல் வருவதற்கும் சபாநாயக்கர் குறிப்பிட்டதை அவரின் சொற்களுக்கு கட்டுப்பட்டு ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சபையை பயன்படுத்தி பெண்கள் மீதான வன்மங்களையோ சமயம் சார்ந்து மார்க்கம் சார்ந்து இருக்கின்ற முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராகவுள்ள வன்மங்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என சுட்டிகாட்டயுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான அவரின் உரையை காணொளி மூலம் இங்கு காணலாம்.