இந்திய விமானங்கள் வான் வெளியை பயன்படுத்த தடை நீடிப்பு!
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த மே 24ஆம் திகதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
கடந்த வருடம் நடைபெற்ற பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் 2025 ஏப்ரல் 24 முதல் இந்திய விமானங்களுக்கான தனது வான்வழியை மூடியதால் இந்திய விமான நிறுவனங்களுக்கு பல கோடி ரூபா இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தி வந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் விமானத்துறை அந்தத் தடையை மேலும் ஒரு மாத காலம் நீடித்து உத்தரவிட்டுள்ளது.