பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் வீட்டில் கொள்ளை; சிக்கிய இருவர்
கொழும்பு- பம்பலப்பிட்டி பிரதேசத்தில் கோடீஸ்வர வர்த்தகர் வீட்டில் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டில் சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்கள், தங்கம், வெள்ளி, முத்துக்கள் மற்றும் கைத்துப்பாக்கி என்பவற்றை கொள்லையிடப்பட்டிருந்தது.
சந்தேக நபர்கள் கைது
இந்நிலையில் கொள்ளையிட்ட சந்தேகநபர்களை பொரளை மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸார் இணைந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். கொம்பனிவீதி மற்றும் ஹோகந்தர பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரிடமிருந்தும் 380 கிராம் தங்க நகைகள், 10,000 அமெரிக்க டொலர்கள், 950,000 ஜப்பானிய யென், ரொலக்ஸ் கைக்கடிகாரங்கள், இரத்தினக் கற்கள் மற்றும் 174 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்கள், கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.