மகிந்தவின் மடியில் பாலச்சந்திரனா? ; இணையத்தில் பரவும் புகைப்படம் கிளப்பிய சர்ச்சை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்தப் புகைப்படத்தில் காணப்படும் குழந்தையின் தோற்றம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் விடுதலைப்புலிகளின் இளைய மகன் பாலச்சந்திரனை நினைவூட்டுவதாக பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
2009ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில், 12 வயதுடைய பாலச்சந்திரன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் பல்வேறு கேள்விகள் மற்றும் மனித உரிமை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அவரது உயிரிழப்பு தொடர்பாக அக்கால அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து பல ஆண்டுகளாக விவாதங்கள் நீடித்து வருகின்றன.
குறிப்பாக, போரின் இறுதிக்கட்டத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கேள்விகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் புகைப்படத்தையடுத்து, பாலச்சந்திரன் சம்பவம் மீண்டும் பலரால் நினைவுகூரப்பட்டு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணொளியை இங்கு காணலாம்.....