பொலிஸாரின் சமிக்ஞைகளை மீறி வாகனத்தை செலுத்திய மூன்று யுவதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி
பொலிஸாரின் சமிக்ஞைகளை மீறி மூன்று யுவதிகள் டிபெண்டர் ரக வாகனத்தை கவனமின்றி ஆபத்தான முறையில் செலுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் 19 வயதுடைய அம் மூன்று யுவதிகளும் கைதான நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் நேற்றைய தினம் முன்னிலைபடுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருதானை பகுதியில் அதிக வேகத்துடன் குறித்த யுவதிகள் பயணித்த போது நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர்.
எனினும் காவல் துறையினரின் சமிக்ஞையை பொருட்படுத்தாது வாகனத்தை செலுத்தியுள்ளனர்.
சுற்றிவளைக்கப்பட்ட யுவதிகள்
பின்னர் பொலிஸார் ஏனைய அவசர சேவைகளுக்கு அறிவித்தமையை தொடர்ந்து பிரிதொரு இடத்தில் வாகனம் சுற்றிவளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த டிபெண்டர் ரக வாகனத்தை செலுத்திய யுவதி விசாரணைகளை மேற்கொள்ள முயற்சித்த போது காவல்துறையினரிடம் அந்த யுவதி சொல்லாடலில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் வாகனத்தை செலுத்தியவரும் அவரோடு பயணித்த இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட யுவதிகள் கொழும்பில் வசிப்பவர்கள் என்பதோடு பிரபல மகளிர் பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் நாவல மற்றும் கொழும்பை சேர்ந்தவர்கள் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.