கடும் எச்சரிகையுடன் அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு பிணை
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, கடும் நிபந்தனைகளுடன் 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் இன்று (11) பிணையில் விடுவித்தார்.
கடந்த ஓகஸ்ட் 31ம் திகதி மட்டக்களப்பு சென்றல் வீதியில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் சுமணரத்ன தேரர் 4 பேருடன் நுழைந்து, அங்குள்ள அரசு ஊழியர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்ட அரச அதிகாரிகளால் மட்டக்ககளப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

வழக்கு பிணையை இரத்து செய்து வழக்கு
இதையடுத்து வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு கடந்த திங்கட்கிழமை (7) சென்றிருந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை தொடர்ந்து இன்று 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை தேரருடன் சென்ற இருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டபோது , தேரரை இனிமேல் எந்த அரச திணைக்களங்களுக்கும் சென்று இவ்வாறு அச்சுறுத்தல் செய்யக்கூடாது, இந்த வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை அச்சுறுத்தல் செய்ய கூடாது என்று நீதிவான் தெரிவித்தார்.
சம்பவத்துடன் தொடர்பட்டு தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இதனை மீறும் பட்சத்தில் இந்த வழக்கு பிணையை இரத்து செய்து வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்படும் என நிபந்தனைகளுடன் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுத்தார்.
அதேவேளை,இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் இருவரை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் அடுத்த வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.