ஆரோக்கிய பால்மாவில் புழு; பிரபல நடிகை பகீர் காணொளி!
ஆரோக்கிய பால்மாவில் புழுக்கள் காணப்பட்டதாகக் கூறப்படும் காணொளி மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிபாஷா பாசு, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
நுகர்வோர் வாங்கும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விற்பனை நிலையங்களில் ஆய்வு
பிபாஷா பாசுவின் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தைப் பெற்ற நிலையில், மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகள் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் ஆய்வுகளை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பால் மற்றும் பன்னீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் இடம்பெறுவதாகக் கூறப்படும் கலப்படம் தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், விதிமுறைகளைப் பின்பற்றாததாகக் கண்டறியப்பட்ட சில நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.