இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதல்... இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
பதுளை - லுணுகலை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றையதினம் (21-08-2024) லுணுகலை நகரில் உள்ள கல்லு குதம் ஏலத்தில் விடப்பட இருந்தது.
இதன்போது, குருணாகலை மற்றும் பதுளை பகுதியில் உள்ள இரண்டு குழுக்கள் குறித்த கல்லு குதத்தை ஏலத்தில் பெறுவதற்கு முற்பட்ட போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், வாகனம் ஒன்றின் பின்பகுதியில் உள்ள கண்ணாடி அடித்து சேதமாக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் காயமடைந்த இருவர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.