நாட்டை புரட்டிப்போட்ட மாண்டோஸ் புயல்; 600 இற்கு மேற்பட்ட காலநடைகள் பலி; தவிக்கும் மக்கள்
மாண்டோஸ் புயல் காரணமாக நாட்டில் அசாதரணமாக நிலவும் கடும் குளிர், விடாத மழை, அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளம், சுழன்றடித்த புயல் காற்று ஆகிய சீரற்ற காலநிலை காரணமாக கடந்த இரு நாள்களில் மட்டும் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, முல்லை தீவு மாவட்டங்களில் சுமார் 600 கால்நடைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
அதுமட்டுமல்லாது 400 கால்நடைகள் வரை உயிரிழக்கும் தறுவாயில் உள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் கால்நடை வளர்ப்போர் பெரும் துன்பத்திற்க்கு உள்ளாகியுள்ளனர்.
உத்தியோக பூர்வமாக பெறப்பட்ட தரவுகள்
உத்தியோக பூர்வமாக பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 367 கால் நடைகள் உயிரிழந்துள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார பணிப்பாளர் சி.வசீகரன் தெரிவித்தார்.
இவற்றில் கிளிநொச்சி மாவட்டத்தில் 168 கால்நடைகள் உயிரிழந்துள்ள அதேநேரம் மேலும் 162 கால் நடைகள் முழு மையாக இயங்காத நிலையில் வீழ்ந்துகிடக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 கால்நட்டைகள் உயிரிழந்துள் ளன.
159 கால்நடைகள் படுக்கையில் உள்ளன. யாழ் மாவட்டத்தில் 49 மாடுகளின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ள அதேநேரம் 17 மாடுகள் அதிக நோய் வாய்ப்பட்டுள்ளன. மருதங்கேணியில் ஒரு பட்டியில் மட்டும் 58 உயர் இன ஆடுகள்கூண்டோடு மரணித்துள்ளன.
இதேநேரம் அதிக நோய்வாய்ப்பட்ட எஞ்சிய 338 கால் நடைகளிற்கும் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துப் பொருள் களைப் பெற்றுக்கொள்வதிலும் பெரும் நெருக்கடி நிலைவுவதால் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை என பணிப்பாளர் சி.வசீகரன் கவலை வெளியிட்டார்.
இதேவேளை கடும் காற்றால் பதுளை மாவட்டத்தில் மட்டும் 895 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலையால் 943 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.