மலசலகூட கழிவு நீர் தொட்டியிலிருந்து துர்நாற்றம் ; பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அநுராதபுரம் , பிஹிம்பியகொல்லேவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மலசலகூட கழிவு நீர் தொட்டியிலிருந்து ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் மலசலகூட கழிவு நீர் தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் , பிஹிம்பியகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கழிவு நீர் தொட்டியிலிருந்து துர்நாற்றம்
வீட்டின் மலசலகூட கழிவு நீர் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அயல் வீட்டார் சடலமாக மீட்கப்பட்டவரின் மகனிடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர், சடலமாக மீட்கப்பட்டவரின் தாயும் மகனும் வீட்டின் மலசலகூட கழிவு நீர் தொட்டியைச் சோதித்துப் பார்த்த போது சடலத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாயின் தாயும் மகனும் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இந்நிலையில் இராணுவ சிப்பாய் எவரேனும் நபரால் கொலை செய்யப்பட்டு மலசலகூட கழிவு நீர் தொட்டியில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.