காலி சிறைச்சாலையில் பரவிய பற்றீரியா கட்டுப்பாட்டுக்குள் !

Sri Lanka Police Galle Sri Lanka
By Kirushanthi Aug 23, 2023 11:49 AM GMT
Report

காலி சிறைச்சாலையில் பரவிவந்த மெனிங்கோகோகஸ் எனும் பற்றீரியா நோய் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்,சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரணசிங்க வழக்கு விசாரணைகளுக்காக கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வது மற்றும் சிறைச்சாலைக்குள் புதிய கைதிகளை அனுமதிப்பதை தற்காலிகமாக இடைநிறுத்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

காலி சிறைச்சாலையில் அண்மையில் பரவிய பற்றீரியா தொற்று காரணமாக கைதிகள் இருவர் உயிரிழந்ததுடன் தொற்றுக்குள்ளான 16 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

காலி சிறைச்சாலையில் பரவிய பற்றீரியா கட்டுப்பாட்டுக்குள் ! | Bacteria Spread In Galle Under Control

கைதிகளின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு விசேட வைத்தியர்கள் குழுவொன்று அனுப்பப்பட்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த குழுவின் அறிக்கைகளுக்கு அமைவாக கைதிகளிடையே மெனிங்கோகோகஸ் பற்றீரியாவால் ஏற்பட்ட நோய் தொற்று நிலைமை என உறுதி செய்யப்பட்டது.

காய்ச்சல், தலைவலி, கழுத்து வலி, குமட்டல், வாந்தி, சூரிய ஒளி உடலில் படுவதால் சிக்கல், உடலில் கடினத்தன்மை என்பன நோய்த் தொற்று அறிகுறிகளாகும். இந்நிலையில், தொற்றுக்குள்ளான 9 பேர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இதில் இருவர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும் 7 பேர் சிறைச்சாலையின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சிறைச்சாலையில் பற்றீரியா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பற்றீரியா மனித மூளையின் செயல்திறனை கடுமையாக பாதிக்கிறது. இதன் காரணமாக விரைவாக மரணம் சம்பவிக்கலாம்.

காலி சிறைச்சாலையில் பரவிய பற்றீரியா கட்டுப்பாட்டுக்குள் ! | Bacteria Spread In Galle Under Control

இதுவரையில் இலங்கையில் அதிகளவில் பரவியதில்லை. குறிப்பாக வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு வருகை தந்த ஒருவரிடமிருந்து இந்த பற்றீரியா பரவியிருக்கலாம்.

இதுவரையில் சிறைச்சாலையில் தொற்று ஏற்பட்ட முறைப் பற்றி கண்டறியப்படவில்லை. காலி சிறைச்சாலையில் சுமார் ஆயிரம் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்.

நோயெதிர்ப்பு குறைபாடு உள்ள தரப்பினர் மீது இந்த நோய் இலகுவில் பரவ வாய்ப்புகள் உள்ளன. குறித்த பற்றீரியா இதற்கு முன்னரும் புதிய மகசீன் சிறைச்சாலை, மஹர சிறைச்சாலைகளில் பரவியது. நாம் அதனை கட்டுப்படுத்தினோம்.

எனவே, பற்றீரியா தொடர்பில் வீனாண அச்சம் கொள்ள தேவையில்லை. பற்றீரியா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முடியுமான அளவு சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிவது, கையுறை அணிவது, தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்துவது என்பன பின்பற்ற வேண்டும்.

கைதிகளை பார்வையிட வருகை தருவோர் போது சுகாதார ஆலோசனைகள் பின்பற்ற வேண்டும் என்றார்.   

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US