வெளிநாட்டு ஆசைகாட்டி மூன்றரை கோடி ரூபாய் மோசடி ; பொலிஸாரின் அதிரடியில் சிக்கிய நபர்
வெளிநாடு செல்வதற்குத் தேவையான விசா பெற்றுத் தருவதாகக் கூறி நபர்களை ஏமாற்றி மூன்று கோடியே ஐம்பத்தெட்டு இலட்சத்து ஐந்நூற்று ஐம்பத்தேழு ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூன்று கோடியே ஐம்பத்தெட்டு இலட்சத்து ஐந்நூற்று ஐம்பத்தேழு ரூபாய் பணத்தை மோசடி செய்தமை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பாணந்துறை பகுதியை சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் தனியார் நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் ஒருவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.