தனது விந்தணுவில் குழந்தை.... பல சலுகை; இளம் பெண்களை அழைக்கும் உலகப் பிரபலம்!
37 வயதிற்கு உட்பட்ட பெண்கள் தனது விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்றுக் கொண்டால், அவர்களின் பிரசவ செலவை ஏற்றுக்கொள்வதுடன் தனது சொத்திலும் பங்கு உண்டு என டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov), கூறியுள்ளமை உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
பிரபல சமூக வலைதள செயலியான டெலிகிராமின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) . ரஷ்யாவைச் சேர்ந்த பாவெல் துரோவ் (Pavel Durov), குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டு உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளார்.

விந்தணு தானம் -100-க்கும் மேற்பட்ட குழந்தைகள்
தற்போது துபாயில் டெலிகிராம் தலைமையகத்தை அமைத்து நடத்தி வரும் பாவெல் துரோவ் (Pavel Durov) , ரஷ்யாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.
41 வயதான அவரது சொத்து மதிப்பு ரூ.1.52 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. அதே நேரத்தில், நிரந்தரமாக ஒரே நாட்டில் தங்காமல் பல நாடுகளில் பயணம் செய்து வாழ்வதையும் அவர் (Pavel Durov) பின்பற்றி வருகிறார்.

பணம் மற்றும் அதிகாரத்தை விட சுதந்திரமே முக்கியம் என்ற நிலைப்பாட்டில் அவர் (Pavel Durov) உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
பாவெல் துரோவுக்கு (Pavel Durov) தற்போது மூன்று மனைவிகளும், ஆறு குழந்தைகளும் உள்ள நிலையில் , விந்தணு தானம் மூலம் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாக அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த அனைத்து குழந்தைகளுக்கும் தன்னுடைய சொத்தில் சம பங்கு வழங்கப்படும் என்றும் அவர் (Pavel Durov) அறிவித்தார்.
இதற்காக, உயில் எழுதிய நாளிலிருந்து 30 ஆண்டுகள் கழித்து, அதாவது 2055-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி, அவரது சொத்துக்கள் 106 குழந்தைகளுக்கு சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் என (Pavel Durov) தெரிவித்திருந்தார்.

பாவெல் துரோவ் (Pavel Durov) புதிய அறிவிப்பு
இந்நிலையில், புதிய அறிவிப்பு ஒன்றை பாவெல் துரோவ் வெளியிட்டுள்ளார். அதன்படி, தனது விந்தணுவை பயன்படுத்தி செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு, முழு மருத்துவச் செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
மேலும், அவ்வாறு குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு தன்னுடைய சொத்திலும் பங்கு வழங்கப்படும் என (Pavel Durov) தெரிவித்துள்ளார் இந்த சலுகை 37 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பொருந்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், உலகளவில் ஆண்களின் விந்தணு தரம் குறைந்து வருகிறது. இதனை சமூகப் பொறுப்பாகக் கருதி, இந்த தானத்தை தொடங்கியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாவெல் துரோவின் (Pavel Durov) இந்த அறிவிப்பு, சமூக வலைதளங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.