பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்பு ; எகிறப்போகும் தங்க விலை
பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பல்கேரிய கணிப்பாளர் பாபா வங்காவின் கணிப்புகள் இன்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
2025ஆம் ஆண்டிற்கான அவருடைய கணிப்புகள் பலவும், உலகளவில் பேசுபொருளானது. இந்தநிலையில் தற்போது பாபா வங்காவின் தங்க விலை கணிப்புகள் கவனத்தை ஈர்த்துள்ளன.

தங்கத்தின் விலை நிலவரம்
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை உச்சத்தைத் தொட்டிருக்கும் நிலையில், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு தங்கத்தின் விலை நிலவரம் குறித்து பாபா வங்காவின் கணிப்புகள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.
இவ்வாண்டு உலகில் பல பகுதிகளில் நிலநடுக்கமும், வெள்ளமும் ஏற்பட்டு உலக அழிவு தொடங்கும் என்றும், பெரிய மோதல்கள், இனக்கலவரங்கள், சோகமான சம்பவங்கள் பதிவாகும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.
அவர் கணித்தது போன்றே பல்வேறு நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதுடன், மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில், சர்வதேச அளவில் நிலவும் போர்ப் பதற்றம், வரி விதிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

இதனால், சாமானியர்கள் தங்கத்தை கொள்வனவு செய்வது எட்டாக்கனியாக மாறியுள்ளது. உலக பொருளாதார நிலை, பணவீக்கம், வட்டி விகிதங்கள், அரசியல் பதற்றங்கள் என தங்கத்தின் விலை பல காரணங்களால் பாதிக்கப்படுகிறது.
இந்தக் காரணிகள் கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் தேவை அதிகரிக்கக் காரணமாக இருந்துள்ளன. 2026இல் பெரும் மந்த நிலை அல்லது போர் போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டால், தங்கத்தின் விலை உண்மையாகவே உயர வாய்ப்பு உள்ளது.
பாபா வங்காவின் கணிப்புகள் பல முறை சரியாக இருந்தாலும், சிலர் அவற்றை யதார்த்தமாக எடுத்துக் கொள்கிறார்கள், ஏனையோர் சீரான சந்தை ஆய்வை முன்னிலைப்படுத்துகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.