ஒவ்வொரு ஆலயங்களுக்குமான விழிப்புணர்வு ; வாசலில் உள்ள புகைப்படம்
அனைத்து ஆலயங்களும், சமூக பொறுப்பை உணர்ந்து, வெளிப்புறத் தூய்மை மற்றும் பொது விழிப்புணர்வை வலியுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிக்க வேண்டும் என சமூக வலைதள பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த விடயடம் தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஆலயத்தின் வெளிப்புறத்திளும், ஆலயத்தின் வாசல்களிளும் இதனை காட்சிப் படுத்த முயற்சி செய்யுங்கள்.
பல சமய நிகழ்வுகள், கூட்டங்கள், உற்சவ காலங்களில் மக்கள் திரண்டபோது, அழுக்காரமைப்பு, கழிவுப் பொருட்கள், மற்றும் பொது ஒழுங்கின்மை போன்றவை ஏற்படும்.
இதனைத் தவிர்க்க, சில ஆலயங்கள் முன்னோடியாக வாசல்களில் விழிப்புணர்வு அறிவிப்புகளை அமைத்து வருகின்றன.
நிர்வாகங்கள் இதற்கு முழுமூச்சாக செயற்பட்டால் மாற்றத்தை கொண்டு வர முடியும்.
நான் அறிந்த வகையில் எந்த ஆலயங்களில் இதனை பின்பற்றுகிறார்கள் என்று தெரிய வில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.(புகைப்படம் முகநூலில் கிடைத்தது ,ஆலயம் தெரிய வில்லை.)
இதனை குறிப்பிடுவதால் பலரால் எதிர்ப்புகளும் வரலாம், ஆதரவுகளும் வரலாம் ஆனால் நாம் சொல்ல வேண்டிய கடமை சொல்லியாக வேண்டும்.
உறுப்பினர்கள் இதற்கு என்று நிர்வாகத்தால் அமைத்தால் அவர்கள் இதனை பார்த்துக் கொள்வர். (உற்சவ காலங்களில்) இதன் பின்னர் மற்றைய நாட்களில் பின்பற்றப்படலாம்.
தூய்மை, ஒழுக்கம், விழிப்புணர்வு ஆகியவை நம் ஆன்மீக நிலையங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். இது ஒரு சிறிய மாற்றமாகத் தோன்றலாம், ஆனால் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என சமூக வலைத்தள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.