சர்வதேச அரங்கில் இலங்கைக்கு மற்றுமொரு பெருமை ; சிறந்த சொகுசு உணவுச் சுற்றுலாத் தலத்திற்கான விருது
ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான ‘Travel & Taste Awards’ நிகழ்வில், ‘ஆண்டின் சிறந்த சொகுசு உணவுச் சுற்றுலாத் தலம்’ என்ற சர்வதேச விருதை இலங்கை வென்றுள்ளது.
உலக சுற்றுலா சந்தை (World Travel Market) கண்காட்சியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க இலங்கை மக்கள் சார்பில் விருதைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கையின் செழுமையான உணவுக் கலாசாரம், பாரம்பரிய உணவு வகைகள், உள்ளூர் விளைபொருட்களின் பயன்பாடு மற்றும் அதிகரித்து வரும் சொகுசு விடுதிகள் ஆகியவற்றைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த அங்கீகாரம் இலங்கையை சர்வதேச உணவுச் சுற்றுலாத் தலமாக மேலும் பிரபலப்படுத்துவதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.