தூங்குவதற்கு முன் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..
இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது முக்கியம். நமது வாழ்க்கை முறை, பழக்கம் வழக்கங்கள், உணவுகள், சரியான தூக்கம் போன்ற பலவற்றால் பலர் பிரச்னைகளை இளம் வயதிலேயே சந்தித்து வருகின்றனர்.
இரவில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, சரியான நேரத்தில் தூங்குவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆனால், இன்றைய காலத்தில் சரியான நேரத்தில் சாப்பிடுவதோடு இல்லாமல் மிகவும் தாமதமாகி சிலர் தூங்குகின்றனர். இப்படி ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால், உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

இரவில் சாப்பிடவே கூடாத உணவுகள்
சாக்லேட் : இரவில் தூங்குவதற்கு முன்பு டார்க் சாக்லேட் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. ஏனென்றால், சாக்லேட்டில் காஃபின், சர்க்கரை அதிகமாக இருக்கும். இதனை இரவில் தூங்குவதற்கு முன்பு சாப்பிடும்போது, இது உங்களது தூக்கத்தை கெடுக்கும். மேலும், சாக்லேட்டில் அதிகளவு சர்க்கரை உள்ளதால் அதில் ஏகப்பட்ட கலோரிகள் உள்ளன. எனவே, இதனை சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும். மேலும், உங்களுக்கு இரவில் செரிமான பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம். அப்படி சாக்லேட் சாப்பிட வேண்டும் என்றால், இரவில் தூங்குவதற்கு மூன்று மணி நேரம் முன்பு சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு சாக்லேட் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

காரமான உணவுகள் :இரவு உணவில் அதிக காரமானதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரமான உணவுகளை இரவில் சாப்பிடும்போது செரிமான பிரச்னைகளை ஏற்படுததலாம். இது உங்களுக்கு தூக்கத்தை கெடுக்கும். காரமான உணவுகளில் உள்ள கேப்சைசின் உடலில் சூட்டை அதிகரிக்கும். மேலும், காரசாரமான உணவுகள அசௌகரியத்தை ஏற்படுத்தி, உங்களது தூக்கத்தை கெடுக்கும். எனவே, இரவில் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

சீஸ்: இரவு நேரங்களில் சீஸ் கலந்த உணவுகளை தவிர்க்கவும். அதாவது, பீட்சா, பர்க்கர் போன்ற சீஸ் கலந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது உங்களது செரிமானத்தை பாதிக்கும். மேலும், சீஸில் அதிகபடியான கொழுப்புகள் உள்ளன. இது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். மேலும், நாளடைவில் உங்களது தூக்கத்தை கெடுக்கும்.

காஃபி : இரவில் தூங்குவதற்கு முன் டீ, காஃபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். காஃபி, டீயில் உள்ள caffeine உங்களது தூக்கத்தை கெடுக்கும். தூங்க செல்வதற்கு முன்பு டீ, காஃபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். இரவில் தூங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு டீ, காஃபி குடித்துக் கொள்ளலாம். இரவில் நீங்கள் குடிக்கும்போது, தூக்கத்தை கெடுத்து மன உளைசச்சல், சோர்வு போன்றவை ஏற்படலாம்.

ஐஸ்கிரீம்: இரவில் தூங்குவதற்கு முன்பு ஐஸ்கிரீம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் ஐஸகிரீம் இரவு தூக்கத்தை தொந்தரவு செய்யலாம். இது உங்கள் உடல் எடையையும் அதிகரிக்கும். மேலும், ஐஸ்கிரீமை இரவில் சாப்பிடுவது உங்களது செரிமான பிரச்னையை ஏற்படுத்தலாம். எனவே, அதனை தவிர்ப்பது நல்லது.