அவுஸ்ரேலிய பெண்ணால் அலறும் இலங்கை கிரிக்கெட் அணி! பலருக்கு சிக்கல்
ரி-20 உலககிண்ண தொடருக்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் மேலும் சில வீரர்கள் மீதும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த மேலும் சில வீரர்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
பெண் பாலியல் வன்புணர்வு
அவுஸ்திரேலியாவில் பெண்ணை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இwத நிலையில் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வன்புணர்வு குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குமாறு முறைப்பாடு செய்த பெண் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.