மறைந்த பாடகர் சுனில் பெரேராவுக்கு இரங்கல் தெரிவித்த அவுஸ்திரேலிய அமைச்சர்
அவுஸ்திரேலியாவின் சுங்க, சமூக பாதுகாப்பு மற்றும் பன்முக கலாச்சார விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ஜேசன் வூட், இலங்கையின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் மறைந்த சுனில் பெரேராவுக்கு அஞ்சலி செலுத்தியதோடு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொப்பிசைப்பாடல் கலாசாரத்தில் மிக முக்கியமானவராகக் கருதப்படக்கூடிய பிரபல பாடகர் சுனில் பெரேரா இன்று திங்கட்கிழமை அவரது 68 ஆவது வயதில் காலமானார்.
இந்நிலையில், அன்னாருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் இரங்கலை தெரிவிப்பதோடு, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இன்று துக்கத்தில் இருக்கும் இலங்கையர்களுக்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்வதாக அவ அவுஸ்திரேலிய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஜேசன் வூட் மேலும் தெரிவிக்கையில், சுனில் அவுஸ்திரேலியாவுக்கு வழக்கமாக வரும் ஒரு நபர், ஒவ்வொரு முறையும் அவர் நாட்டிற்கு வருகை தரும்போது கூட்டம் நிரம்பி வழியும் எனத் தெரிவித்துள்ளார்.