இலங்கைக்கு வெளிநாட்டு நோயாளர்களை ஈர்க்க இதை செய்யவேண்டும்! ரணில்
வெளிநாட்டை சேர்ந்தவர்களை சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து வருவதற்கு மருத்துவ சுற்றுலா மற்றும் உயர்தர சுகாதார சேவையை பேணுவது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதற்காக சுகாதாரக் கொள்கை மீள் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் நேற்று முன்தினம் (08) பிற்பகல் ஜோசப் பிரேசர் வைத்தியசாலையின் 100வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட போது இதனை குறிப்பிட்டார்.
இலங்கையில் அதிகளவான வைத்தியர்களை உருவாக்க, அதிகளவான மருத்துவ பீடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், இந்த நாட்டில் உள்ள சுகாதார பணியாளர்கள் பலமான எதிர்காலத்திற்காக மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.