இலங்கையர்களே அவதானம்! இணையத்தளம் ஊடாக இடம்பெறும் பாரிய மோசடி
இலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் உள்ள, இரண்டு கணக்கிற்குள், இணையத்தளம் ஊடாக சட்டவிரோதமாக ஊடுருவி, ஒரு கோடி ரூபாக்கும் மேலதிக தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது.
குறித்த வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடியே 37 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின், நிதி மற்றும் வணிகக் குற்ற விசாரணைப்பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, வாத்துவ, பிலியந்தலை, பண்டாரவளை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 22 - 36 வயதுக்கு இடைப்பட்ட, காலி, வெலிகம, ரத்கம, வாத்துவ மற்றும் பட்டியகெதர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.