லண்டனில் தமிழினப் படுகொலைக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்
லண்டன் நகரில் தமிழினப் படுகொலைக்கு எதிராக இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
லண்டன் நாடாளுமன்றம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டம், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழ் மக்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் ஐக்கிய இராச்சியம் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
போராட்டத்தில் கலந்து கொண்ட புலம்பெயர் தமிழர்கள், தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரியும், உயிரிழந்த மக்களை நினைவுகூரியும் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திய அவர்கள், சர்வதேச சமூகத்தின் கவனத்தை மீண்டும் ஈர்க்கும் வகையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


