இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக ஊழியர் கைது
இந்தியாவின் திருப்பூர் கல்லாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சக ஊழியர் ஒருவருக்கு எதிராக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக விசாரணை
பொலிஸார் தெரிவித்ததாவது, ஒடிசா மாநிலத்தின் சியாம்சுந்தர்பூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த ஒரு ஆண்டாக திருப்பூரில் தங்கி தனியார் பனியன் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார்.

அதே நிறுவனத்தில் ஒடிசா மாநிலம் பத்ரக் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மில்லு என்பவரும் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மில்லு, குறித்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், நேற்று முன்தினம் மீண்டும் அவரிடம் பாலியல் அத்துமீறல் முயற்சியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வடக்கு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.