ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி!
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெறுவது குறித்து செய்திகளை சேகரிக்க சென்ற வேளையில் அவர் மீது தாக்குதல் முயற்சி இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறியும் அனுமதி பத்திரங்கள் பெறப்படாதும் சட்டவிரோதமாக ஆற்றிலே உழவு இயந்திரங்களை விட்டு மணல்களை ஏற்றி காட்டுப்பகுதிகளிலேயே மணல்களை பறித்து காட்டுக்குள் டிப்பர் வாகனங்களை கொண்டு சென்று மண் ஏற்றுகின்ற மரம் கடத்துகின்ற பல்வேறு குற்ற செயல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பதினெட்டாம் போர் பகுதியில் இன்றையதினம் (15) நண்பகல் வேளையிலே ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் குறித்த விடயங்களை செய்தி சேகரிக்க சென்று இருந்தார்
இதன்போது ஏ_9 வீதியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காட்டு பகுதியில் மணல் கொண்டு வந்து குவிக்கப்படுவதை காணொளி பதிவு செய்து கொண்டிருந்தபோது NP BFR 8429 மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் ஊடகவியலாளர் தவசீலன் அவர்களது ஒளிப்படகருவியை பறிக்க முற்பட்டதோடு ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டதோடு கொலை அச்சுறுத்தல் விடுத்து நிலையில் மாங்குளம் பொலிசாரின் உதவியுடன் தவசீலன் குறித்த இடத்தில் இருந்து வெளியேறியுள்ளார்
காட்டுக்குள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவது மாத்திரமின்றி அங்கு வருகைதந்து யார் வீடியோ எடுக்க சொன்னது என்றும் வீடியோ எடுக்க விடாது தடுத்து சட்டவிரோத மணலுடன் நின்ற உழவு இயந்திரத்தை அந்த இடத்தில் இருந்து எடுத்து சென்றதோடு ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்
இதேவேளை சம்பவ இடத்திற்கு வந்த மாங்குளம் பொலிசார் குறித்த காட்டுக்குள் செல்லும் வீதியை ஜேசிபி இயந்திரம் கொண்டு வெட்டி குறித்த காட்டுக்குள் செல்லமுடியாதவாறு செய்துள்ளனர்




