தலைமன்னாரில் கடத்தல் சம்பவம் முறியடிப்பு; சிக்கிய இருவர்
தலைமன்னாரில் 3 பிள்ளைகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைதான இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் வியாழக்கிழமை (11) பிற்பகல் 3.30 மணியளவில் வீதியால் சென்றுகொண்டிருந்த மூன்று பெண்பிள்ளைகளை அவ்வழியே வாகனத்தில் பயணித்த இருவர் கடத்த முயற்சித்துள்ளதாக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடத்தல் முயற்சி
சம்பவம் தொடர்பில் ஊருக்கு பொருட்களை விற்கச் சென்ற வாகன சாரதி, அவரது உதவியாளர் என இருவரை சந்தேகத்தின் பேரில் தலைமன்னார் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கடத்தல் முயற்சி இடம்பெற்ற பின்னரும் அவர்கள் அந்த ஊரில் உள்ள கடைகளுக்கு பொருட்களை விற்பனை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்தது.
அதோடு தாங்கள் கடைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் பொருட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக அவ்வூருக்கு போய் வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைதான இருவரும் நேற்று (12) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்ளை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அதேவேளை அண்மைய காலங்களில் பாடசாலை மாணவர்களை சிலர் கடத்த முயற்சிப்பதாக தெரிவித்த நிலையில், பாடசாலைகள அருகே பொலிஸார் மற்றும் இராணௌவத்தில் பாதுகாப்பு கடமைகளில் ,ஈடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.