யாழில் காணியை இராணுவத்திற்கு வழங்கும் முயற்சி ; சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள சர்ச்சை
யாழ்ப்பாணத்தில் தனியார் காணி ஒன்றை இராணுவத்திற்கு வழங்குவதற்கு ஒருவர் முன்வந்ததாக வெளியாகிய தகவல், சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் தனது காணியை இராணுவப் பயன்பாட்டிற்காக வழங்க முன்வந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளனர்.
நீண்டகாலமாக காணி உரிமை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், தனியார் காணிகளை இராணுவத்திற்கு வழங்கும் தீர்மானங்கள் கவலைக்குரியவை என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் உள்ளிட்ட சில அரசியல் பிரதிநிதிகளும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
காணி வசதியின்றி பல குடும்பங்கள் சிரமங்களை எதிர்கொண்டு வரும் சூழலில், இவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், குறித்த காணி வழங்கல் தொடர்பான தகவல்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் ரகசியமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், காணி உரிமை, மக்கள் உணர்வுகள் மற்றும் இராணுவப் பயன்பாடு தொடர்பான விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன.
எனினும், காணியை வழங்க முன்வந்த நபரின் நோக்கம், காணி தொடர்பான சட்ட நிலைமை மற்றும் சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து மேலதிக தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணொளியை காணலாம்......