மாணவிகளைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்
பாடசாலை மாணவிகளைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மல்லாவி காவல்நிலைய கான்ஸ்டபிள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதன்படி,
அவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - யோகபுரம் பகுதியில் உள்ள பாடசாலையொன்றுக்குள் மதுபோதையுடன் பிரவேசித்து அங்கிருந்த 3 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்குப்படுத்த முயன்றதாகக் குறித்த கான்ஸ்டபிள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அறியக்கிடைத்ததையடுத்து குறித்த கான்ஸ்டபிள் மீது, குறித்த மாணவிகளின் பெற்றோரும் தாக்குதல் நடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது குறித்த மல்லாவி காவல் நிலையத்துகுக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரான கான்ஸ்டபிள் இன்றையதினம் மல்லாவி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.