பசிக்கு உணவருந்த சென்ற தமிழர்கள் மீது தாக்குதல் ; தென்னிலங்கையில் பயங்கரம்!
காலியில் உள்ள இந்திய முன்னணி ஹோட்டலுக்குச் சென்று உணவு முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்த தமிழ் குழுவினர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக காலி பொலிஸ் நிலையத்திலேயே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹோட்டல் ஊழியர்கள் தாக்குதல்
பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து காலிக்கு விடுமுறைக்காகச் சென்று இரவு உணவிற்கு குறித்த இந்திய ஹோட்டலுக்குச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
குறித்த குழு நேற்று (16) இரவு உணவை முன்பதிவு செய்து, சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, உணவு தீர்ந்துவிட்டதாக ஹோட்டல் பொறுப்பாளர் கூறியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள், "உணவு இல்லை என்று தெரிவிக்க 30 நிமிடங்கள் ஆனதா?" என்று கேள்வி கேட்டுள்ளனர்.
காணொளியை காண இங்கு அழுத்துங்கள்
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஹோட்டல் ஊழியர்கள் அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஹோட்டலில் சுமார் 30 பேர் தங்களைத் தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்கானவர்கள் கூறுகின்றனர்.
அச்சத்தில் கதறிய குழந்தைகள்
அதேவேளை தம்மை தாக்குவதாக கூறிய தகவலைத் தொடர்ந்து, அவர்களது குடும்ப உறுப்பினர்களில் மற்றொரு குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு பிரவேசித்துள்ள நிலையில் அவர்களையும் ஹோட்டல் ஊழியர்கள் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த எதிர்பாராத சம்பவத்தால் 28 வயது இளைஞனுக்கு தலையில் காயம் ஏற்பட்டதுடன், 17 வயது சிறுவனுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. மேலும் சம்பவத்தில் 14 வயது சிறுவன் ஒருவனும் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்ய்ப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான காணொளி வெளியாகியுள்ள நிலையில் சிறுவர்கள் அச்சத்தில் அழும் சத்தமும், பெண் ஒருவர் தமிழில் பேசுவதையும் அவதானிக்க முடிகின்றது.