யாழில் யாசகம் பெற்ற பெண் மீது தாக்குதல் ; சமூக வலைத்தளங்களில் கண்டனம்
யாழ்ப்பாணம் கண்ணாட்டிட்டி சிவன் கோவிலடி பகுதியில் யாசகம் பெற்று வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த பெண், தாக்குதல் நடத்திய நபரின் மனைவியிடம் யாசகம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்து குறித்த நபர் ஆத்திரமடைந்து கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தாக்குதலுக்குப் பின்னர் குறித்த பெண்ணுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்திய நபர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர் எனத் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.