போதை மாத்திரைகளை பெற சிட்டை வழங்க மறுத்த மருத்துவர் மீது தாக்குதல்!
போதை மாத்திரைகளை வாங்குவதற்கு வைத்தியரின் சிட்டையை எழுதித் தருமாறுகோரி சட்ட வைத்திய அதிகாரியை தாக்கிய இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அனுராதபுரம் பதவியா ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
போதை மாத்திரை
போதைக்கு பயன்படுத்தக்கூடிய மாத்திரைகளை எழுதித் தரும்படி குறித்த இளைஞன் வைத்தியரை நாடியுள்ளான். எனினும் சுதாகரித்துக் கொண்ட வைத்தியர் அவ்வாறு எழுதி வழங்க முடியாது என மறுத்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த இளைஞன் வைத்தியரை தாக்கியுள்ளான். இதனையடுத்து வைத்தியர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
விரைந்து சென்ற பொலிஸார் அந்த இளைஞரை கைது செய்து ஹெப்பிட்டிக் கொலாவ நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.