இரவில் கொழும்பு நகரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
கொழும்பு நகரில் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் இரவு 10.00 மணிக்குப் பின்னர் எதுவும் நடைபெறாது நகரம் செயலற்றதாகிவிடும் என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் பெரும்பாலான மக்கள் உணவருந்துவதற்கும் பப்களில் நேரத்தை செலவிடுவதற்கும் நகரங்களுக்கு வருகிறார்கள்.
ஆனால் இங்கு கொழும்பு நகரில் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. இங்கு மக்களுக்கு இரவு வாழ்க்கை இல்லை. அனைத்து கடைகள் மற்றும் பொழுதுபோக்கு வழங்குநர்கள் இரவு 10.00 மணிக்குப் பிறகு தங்கள் கடைகளை அடைத்து விடுகின்றனர்.
நாட்டுக்கு டாலர்கள் கிடைக்காவிட்டால், எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் வீட்டுக் கொல்லைப்புறங்களில் எரிவாயுவையோ எரிபொருளையோ தயாரிக்க முடியாது. அனைத்து பரிவர்த்தனைகளும் டாலர்களில் மேற்கொள்ளப்படும் மன்னார் தீவை ஒரு பொழுதுபோக்கு வலயமாக மாற்றலாம்.
“நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோது, எங்கள் பெரியவர்கள் எங்களை உலர் மீன் வியாபாரத்தில் ஈடுபடுத்த மன்னாருக்கு அனுப்புவார்கள் என்று எங்களை பயமுறுத்துவார்கள், ஆனால் உலர் மீன் உற்பத்தியைத் தவிர பொழுதுபோக்கு பூங்காவை நிறுவுவதற்கு மன்னார் ஒரு சிறந்த தீவு. நம்மால் முடியும். டொலர்களை கொண்டு வருவதற்கு நாட்டில் பல விடயங்கள் உள்ளன எமக்கு தேவை உற்பத்தி யோசனைகள் மட்டுமே என இராஜாங்க அமைச்சர் கமகே தெரிவித்துள்ளார்.