இன்றைய நாளில் எந்த ராசிக் காரர்களுக்கு பண யோகம்
குரோதி வருடம் சித்திரை மாதம் 22 ஆம் திகதியான இன்று ஞாயிற்றுக்கிழமை 05.05.2024 சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.
இந்நிலையில் பணயோகும் கிடைக்கும் இராசிக்கார்கள் யார் என பார்போம்.
மேஷம்
வணிகர்கள் வியாபாரத்தில் சிக்கல்களை இன்று எதிர்கொண்டாலும் பிரச்சனைகளில் இருந்து விடுபட வழி கிடைக்கும். முக்கிய விஷயங்களில் உரிய நேரத்தில் முடிவெடுப்பது அவசியம். உங்கள் நிதி நிலைமைக்கு இன்று எந்த பிரச்சனையும் இல்லை. உங்களது செயல்திறன் இன்று நன்றாக இருக்கும். பரிகாரம்: பெற்றோரின் ஆசிர்வாதம் பெற்று வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்
ரிஷபம்
உங்களின் முக்கிய நடவடிக்கைகளில் ரகசியத்தன்மையை பேணுங்கள். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கும் பாதகமான சூழலை தீர்க்க இன்று சரியான நாள். குடும்ப உறுப்பினர்களுடன் இன்று உங்களுக்கு கருத்துவேறுபாடு ஏற்பட கூடும். பரிகாரம்: சிவலிங்கத்தின் மீது தண்ணீர் அபிஷேகம் செய்யவும்
மிதுனம்
இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் சில சாதனைகளை செய்வர்கள். இன்று நீங்கள் வெளிப்படுத்தும் கடின உழைப்பு எதிர்காலத்தில் சிறந்த பலனைத் தரும். உங்களின் பொருளாதார நிலைமை முன்பை விட சீராக இருக்கும். பரிகாரம்: அனுமனுன் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்
கடகம்
இன்று நிலுவையில் இருக்கும் வேலைகளை முடிப்பதில் சிக்கல்கள் இருக்கும். சொந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று அபரிமிதமான வெற்றி கிடைக்கும். இன்று எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்த வேண்டாம். பரிகாரம்: விநாயகருக்கு கொழுக்கட்டை செய்து படைக்கவும்
சிம்மம்
நீண்ட நாட்களாக தடைபட்ட அனைத்து வேலைகளையும் முடிப்பதற்கு இன்று சாதகமான நாள். சக பணியாளர்களுடன் அனுசரித்து செல்வதில் இன்று சிரமங்கள் ஏற்படும். சிறு வணிகர்கள் தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பணவரவு இன்று சிறப்பாக இருக்கும். பரிகாரம்: ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும்
கன்னி
வணிகத்தில் உள்ளவர்கள் இன்று அதிக அனுபவம் பெற வேண்டிய அவசியம் உள்ளது. போட்டித் தேர்வுகளில் இன்று பங்கேற்கும் கன்னி ராசிக்காரர்கள் வெற்றி பெறுவார்கள். எதிர்பார்த்த வேலை கிடைப்பதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது. உங்களை முகத்திற்கு நேராக புகழ்ந்து பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பரிகாரம்: பசு மாடுகளுக்கு பசுந்தீவனம் கொடுக்கவும்
துலாம்
வணிகர்களுக்கு இன்று வியாபார நடவடிக்கைகள் மேம்படும். ஒரு குறிப்பிட்ட அமைப்பு அல்லது குழுவில் சேர உத்தேசித்து இருந்தால் அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ரிஸ்க்கான விஷயங்களில் இருந்து இன்று விலகி இருங்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மட்டும் கவனித்து சர்ச்சைக்குரிய விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். பரிகாரம்: கிருஷ்ண பெருமானை வழிபடவும்
விருச்சிகம்
சொத்து சம்பந்தமான விவகாரத்தில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கலாம். வணிகர்களுக்கு தொழில் சம்பந்தமாக இருக்கும் பிரச்சனைகள் இன்று தீரும். ஊழியர்களின் வேலைத்திறன் அதிகரிக்கும். புதிய விஷயங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். பரிகாரம்: பறவைகளுக்கு உணவளிக்கவும்
தனுசு
இன்று நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பீர்கள், புதிய வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள் மற்றும் பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள். சட்ட ரீதியான விஷயங்களில் கவனமாக இருக்கவும், அரசு வேலையில் இருப்பவர்களுக்கு இன்று முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படலாம். பரிகாரம்: பிராணாயாமம் பயிற்சி செய்யுங்கள்
மகரம்: இன்று நீங்கள் பல காரியங்களில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நீண்ட நாட்களாக வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் உள்ளவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இன்று எதிலும் அவசரம் காட்ட கூடாது. பரிகாரம்: விஷ்ணு பெருமானை வழிபடவும்
கும்பம்
வணிகர்கள் தங்கள் தொழில் சம்பந்தமான புதிய திட்டங்களை இன்று செயல்படுத்துவது நன்மை தரும். கமிஷன் மற்றும் துணி தொடர்பான வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இன்று லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். பல நாட்களாக நீடித்த பிரச்சனைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும். பரிகாரம்: அரச மரத்தடியில் விளக்கு ஏற்றுங்கள்
மீனம்
வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று ஒரு பெரிய ஒப்பந்தம் முடிய வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையும் மன உறுதியும் முக்கிய முடிவை எடுக்க உதவும். ஊழியர்களுக்கு இன்று பணிச்சுமை அதிகரிக்கும். அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை இன்று உங்களுக்கு உதவியாக இருக்கும். பரிகாரம்: துர்க்கை கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்