பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் சகா அதிரடி கைது
பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான "அவிஷ்க ஹேஷன்" என்பவரின் சகா கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ் போதைப்பொருள்
கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து மின்னணு தராசு ஒன்றும் சுமார் 08 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி கமகே நிலந்தவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் களுபோவில வைத்தியசாலை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தெஹிவளை, களுபோவில, பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகிறது.