2 வயது குழந்தையை கடத்தி பாலியல் கொடுமை; கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ரவி அசோக் குமாரே(35) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு 2 வயது குழந்தையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் அவரது கருணை மனுவை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நிராகரித்துள்ளார் ,
கொலை செய்த வழக்கில் அவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு கீழ் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. அந்த தண்டனையை மும்பை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.

இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்துவிட்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என சந்தேக நபர் , ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்.
குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்மு நிராகரித்து உத்தரவிட்டார். இதனால் ரவி அசோக் குமாரேவுக்கு மரண தண்டனை உறுதி ஆகியுள்ளது.