கொழும்பு மசாஜ் நிலையத்தில் சிக்கிய தாய்லாந்து பெண்கள்
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் தாய்லாந்து பெண்கள் உட்பட ஏழு பேர் (15) கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, விபச்சார விடுதிக்கு உதவியதாக கூறப்படும் ஒரு சந்தேக நபரும் ஆறு தாய்லாந்து பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் வாதுவை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும், பெண் சந்தேக நபர்கள் 29 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார், மேற்கொண்டு வருகின்றனர்.