தமிழக நிவாரணப் பொருட்களுக்கு மக்களிடம் பணம் கோரப்படுகிறதா!
பொருளாதார நெருக்கடியில் திண்டாடும் இலங்கை மக்களுக்கு தமிழக அரசினால் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாஅறு வழங்கப்பட்ட பொருட்கள் அரசாங்கத்தால் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த நிவாரணப் பொருட்களுக்கு பணம் அறிவிடப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனவே அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக தெரியப்படுத்துமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதை அவர் தெரிவித்தார்.
ஹப்புத்தளை, கொட்டலாகல பிரதேசத்தில் வசிக்கும் மக்களிடம் உலர் உணவுப் பொருட்கள் விநியோகிப்பதற்கு பணம் அறிவிடப்படுவதாகவும் பால்மா விநியோகிப்பதற்காக ரூபா 50 ரூபா கோர்ப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்த முறைப்பாடு தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி மற்றும் வேறு கட்டணங்கள் சேகரிக்கும் தரப்பினரை உடனடியாக தெரியப்படுத்துமாறும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்