தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் களவாடப்பட்ட புறாக்கள்!
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் ஆர்.சி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த திருட்டு சம்பவம் சனிக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரவு வேளையில் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் நுழைந்து கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த 32 புறாக்களை திருடிச்சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைதுசெய்யுமாறு தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் ஆர்.சி. ராஜபக்ஷ பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.