ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் : பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பங்களாதேஷ் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றியை பெற்றுள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இன்றைய தின போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சதீர சமரவிக்ரம 93 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பங்களாதேஷ் அணி சார்பில் பந்து வீச்சில் தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 258 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
அந்த அணி சார்பில் அதிகபட்சமாக டவ்ஹித் ஹிரிடோய் 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் மகேஷ் தீக்ஷனா, தசுன் ஷனக, மதீஷ பத்திரன ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.