பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்து ஷிவினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முக்கிய போட்டியாளர்!
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் 95 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 13 போட்டியாளர்கள் இதுவரை வெளியேறியுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் தற்போது 8 போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அத்தோடு, கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விடயங்களையும் பேசியிருந்தார்.
இவ்வாறான நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோளார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
இந்நிலையில், வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அசல் கோளார் - ஷிவின் இடையே வாக்குவாதம் ஏற்படுகின்றது.
அந்த சூழ்நிலையில் பேசும் அசல், "நீங்க ஒரு விடயம் சொன்னீங்க. அது தப்பான விடயம். மக்கள் எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இருக்காங்க. நம்ம வீட்ல இருக்கவங்க பார்க்காததை மக்கள் பார்த்திருக்காங்க. அதுனால தான் நான் வெளில போய்ட்டேன்னு சொன்னீங்க.
அத்தோடு அப்போ, அந்த மாதிரி ஒரு விடயமே நடக்காதபோது, இப்படியும் ஒன்னு நடந்திருக்கலாம் அப்படின்னு நீங்க மேற்கோள் காட்டுற மாதிரி இருந்துச்சு" என்கிறார்.
இதற்கு பதிலளிக்கும் ஷிவின், "என்கிட்டே கமல் சார் கேட்டாலும் நான் பார்த்தவரைக்கும் இவ்வளவுதான் சார். அத்தோடு நான் பார்க்காம யாரு என்ன பேசுனாங்கன்னு எனக்கு தெரியாதுன்னு தான் சொல்லுவேன். மக்கள் பாக்குறது தானே உண்மை. 24 மணித்தியாலத்திலும் நேரலை போயிட்டு தான் இருக்கு. மக்கள் என்ன நடக்குதுன்னு பார்க்க தானே போறாங்க?" என்கிறார்.
இருப்பினும், இதனைத் தொடர்ந்து பேசும் அசல்,"மக்கள் பார்க்குறாங்க சரி, ஆனா நடக்காத ஒன்னை நடந்திருக்கலாம்னு சொன்ன மாதிரி இருந்துச்சு உங்க பேச்சு" என்கிறார்.
அப்போது ஷிவின், "இந்த விடயம் நடந்திருக்குன்னு நான் சொல்லியிருந்தா நீ என்னை கேள்வி கேக்கலாம். ஆனா, நம்ம கண்ணுக்கு தெரியாத விடயம் மக்கள் பார்த்திருப்பாங்கன்னு தான் சொன்னேன்.
இது ஓப்பன் ஸ்டேட்மென்ட் தான். இதுல என்ன இருக்கு?" என்கிறார். இதன் பின்னர் அங்கிருந்த சக போட்டியாளர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர்.