தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய அருச்சுனா எம்பி; யாழ் இளைஞர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்
ஜெனிவா சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா , புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் யாழ்ப்பாண இளைஞர்கள் தொடர்பிலும் கூறிய கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் இளைஞர்கள் குடு அடிப்பதாக அர்ச்சுனா வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் யாழ் இளைஞர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் மக்களின் பிரச்சனையை பேசாத அர்ச்சுனா
ஜெனிவாவில் சென்று தமிழர்கள் பிரச்சனைகளை பேசாது, தன்மீதுள்ள வழக்கு தொடர்பில் அருச்சுனா கூறியமையும் தமிழினத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அருச்சுனா வெளியிட்ட காணொளி தொடபில் தாயகத்தில் இருந்து மட்டுமல்லாது புலம்பெயர் மக்களும் கடும் சினத்தில் அர்ச்சுனா எம்பிக்கு எதிராக கண்டனங்களை கூறி காணொளிகளை வெளியிட்டுள்ளனர்.