கைதான முன்னாள் ஜனாதிபதி ரணிலின் ஆலோசகருக்கு பிணை
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் சரித ரத்வத்தே பிணையில் விடுவிக்கபப்ட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் அவரது சிரேஷ்ட ஆலோசகராகவும் சரித ரத்வத்தே இருந்தார்.

வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை
இந்நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று காலை அவர் கைதான நிலையில் அவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.
சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார். சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.