யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்தில் தள்ளாடிய பணியாளர்!
நேற்றையதினம் யாழ்ப்பாணம்- காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இரவு தபால் ரயிலின் உறங்கும் பெட்டிக்கு பொறுப்பாகவிருந்த ரயில் பணியாளர், மதுபோதையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் ரயில் பாதுகாப்பு இராணுவத்தால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயிலின் பிரதான கட்டுப்பாட்டாளர் அனுராதபுரம் ரயில் நிலைய கட்டுப்பாட்டு காரியாலயத்துக்கு அறிவித்ததன் பிரகாரம் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யும் போது அவரிடம் மதுபானம் நாற்றம் வீசியுள்ளது.
கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு , அனுராதபுரம் நீதிமன்ற வைத்தியரிடம் ஆஜர்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது மதுபானம் அருந்தியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ரயில் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.