முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு ...ஆபாச வார்த்தை; அதிரடியாக கைதான நபர்
தமிழ்நாட்டை உலுக்கிய சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நெல்லையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா, பெங்களூருவில் உள்ள அப்பிள் (Apple) நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

முதலமைச்சருக்கு எதிராக ஆபாச வார்த்தை
விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்த இவர், சிறுமி கொலை விவகாரத்தை முன்னிறுத்தி முதலமைச்சருக்கு எதிராக ஆபாச வார்த்தைகளால் அவதூறு பதிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து பாளையங்கோட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு (புகார்) அளித்தார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஜேம்ஸ் ராஜாவுக்கு எதிராக நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்து சிறையிலடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சூலூர் சிறுமி கொலை வழக்கில் ஏற்கனவே இருவர் , காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.