வடக்கில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்களுக்கு நேர்ந்த கதி!
யாழ் கடைக்காடு கடற்பகுதியில் நடாத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதியற்ற வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த 07 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இச்சம்பவம் நேற்றைய தினம் (01.09.2023) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன் இனத்தின் நிலைத்தன்மையை அச்சுறுத்தும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில் கடற்படையானது தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
இம்முயற்சிகளின் விரிவாக்கமாக, வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட கடற்படை நிலைநிறுத்த வெத்தலகேணியைச் சேர்ந்த சுண்டிக்குளம் கடற்படையினர் கடைக்காடு கடற்பகுதியில் இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அனுமதியற்ற வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 07 பேர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருந்த நபர்கள் மீன் பிடிக்க பயன்படுத்திய 02 டிங்கி படகுகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 38 வயதுக்குட்பட்ட யாழ்ப்பாணம் முள்ளியனில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவலறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவவலறியப்பட்டுள்ளது.