ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு தேவையான மருத்துவப் பயிற்சி வழங்க தீர்மானம்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ விஞ்ஞான பீட மாணவர்களுக்கு அவசியமான மருத்துவ பயிற்சிகளை களுபோவில போதனா வைத்தியசாலையிலும் மஹரகம பற் சிகிச்சை நிறுவனத்திலும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ விஞ்ஞான பீடத்தில் நான்கு ஆண்டுகளிலும் பயிலும் 145 மாணவர்கள் உள்ளனர்.
இந்தநிலையில், அவர்களுக்கான மருத்துவ பயிற்சிகள் வழங்குவதில் பிரச்சினைகள் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான கலந்துரையாடல் ஒன்று விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, பல் மருவத்துவ விஞ்ஞான பீட மாணவர்களுக்கு அவசியமான மருத்துவ பயிற்சிகளை களுபோவில போதனா வைத்தியசாலையிலும் மஹரகம பற் சிகிச்சை நிறுவனத்திலும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.