தமிழரசு கட்சியின் உறுப்பினரை தாக்கிய ஆர்னோல்ட்!
தமிழரசு கட்சியின் கூட்டத்தின் போது, கட்சியின் உறுப்பினரும் சிவசேனையின் சிவக்காவலருமான செயமாறன் மீது யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட் தாக்குதல் நடத்தியுள்ளார்.
மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் காரியாலயத்தில் இன்று கட்சியின் கூட்டம் நடந்துள்ளது.
இந்நிலையில் தமிழரசுகட்சியின் உறுப்பினரும் சிவசேனையின் சிவக்காவலருமான திரு செயமாறன், யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆர்னோல்டால் உனக்கு இங்கு என்னவேலை இங்கு கிறிஸ்தவ சட்டம் தான் என்று கூறிகடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இதன் போது படுகாயம் அடைந்த திரு செயமாறன் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.